21,000 வேலையை விட்டு நீக்கிய.. மார்க் சக்கர்ப்ர்க்கின் சொத்து மதிப்பு.. 10.2 பில்லியன் டாலர் உயர்வு!
Apr 29, 2023,11:17 AM IST
டெல்லி: மெட்டா (பேஸ்புக்) நிறுவனர் மற்றும் சிஇஓ வான மார்க் சக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 10.2 பில்லியன் டாலர் உயர்ந்து, தற்போது 87.3 பில்லியன் டாலராக மாறியுள்ளது. உலகின் 12வது பணக்காரராக அவர் ப்ளூம்பர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
சமீப மாதங்களில் மெட்டா நிறுவனம் மிகப் பெரிய அளவில் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வந்தது. இதுவரை 21,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் மெட்டாவின் பங்கு மதிப்பு 14 சதவீதம் வரை உயர்ந்தது. இதன் காரணமாக மார்க்கின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.
மெட்டா நிறுவனம் கடந்த காலாண்டில் 28.65 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த கடந்த மார்ச் காலாண்டை விட 3 சதவீதம் அதிகமாகும். நஷ்டத்தில் ஓடி வந்த மெட்டா இப்படி வருவாய் ஈட்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2022ம் ஆண்டு பங்கு மதிப்புசரிவு காரணமாக ஒரே நாளில் தனது சொத்து மதிப்பில் 71 பில்லியன் டாலரை இழந்தார் சக்கர்பர்க். தற்போது விட்டதைப் பிடிக்க ஆரம்பமித்துள்ளார்.