Nobel prizes 2024.. மருத்துவத்திற்கான நோபல் பரிசு .. 2 ஸ்வீடன் ஆய்வாளர்களுக்கு அறிவிப்பு

Aadmika
Oct 07, 2024,04:05 PM IST

ஸ்டாக்ஹாம் : 2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


2024ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 07ம் தேதி துவங்கி, அக்டோபர் 14ம் தேதி வரை அறிவிக்கப்பட உள்ளன. இந்த பரிசின் மொத்த மதிப்பு 11 மில்லியன் ஸ்வீடிஸ் க்ரோன்கள். அதாவது 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.3 கோடி ஆகும். 1901ம் ஆண்டு முதல் நோம்பல் கழகத்தால் ஒவ்வொரு துறையிலும் சிறப்பு பங்களிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 




2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்என்ஏ மற்றும் அது ஜீனாக உருமாறிய பிறகு அளிக்கும் பங்களிப்பு குறித்து இவர்கள் இருவரும் இணைந்து கண்டுபிடித்ததற்காக, மரபியல் துறை அடிப்படையில் இவர்களுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டும் அமெரிக்க- ஹங்கேரி ஆய்வாளர்களான கடாலின் கரிகோ மற்றும் ட்ருவ் வெசிமேன் ஆகியோர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தாக மைக்ரோ ஆர்என்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டுபிடித்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இயற்பியலுக்கான பரிசும், புதன்கிழமை வேதியியலுக்கான பரிசும், வியாழக்கிழமை இலக்கியத்திற்கான பரிசும், வெள்ளிக்கிழமை அமைதிக்கான பரிசும், இறுதியாக அக்டோபர் 14ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. நோபல் பரிசு வென்றவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்