ஒரே நாளில் உயர்ந்த சொத்து மதிப்பு... கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய மார்க் ஜூக்

Manjula Devi
Oct 05, 2024,12:37 PM IST

நியூயார்க்:   பேஸ்புக் நிறுவனரும், மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கபர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்ததால் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். 


புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, மெட்டா நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு மாதமாகவே  தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.இதனால் ஜூக்கபர்கின் சொத்து மதிப்பு, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ்ஸைவிட 1.1 பில்லியன் உயர்ந்தது. இந்த மெட்டா பங்குகளின் வளர்ச்சிக்கு காரணம் செயற்கை நுண்ணறிவு முதலீடு தான் காரணம் என மெட்டா நிறுவனம்  கூறியுள்ளது.




அதன்படி நடப்பு ஆண்டில் மட்டும் மார்க்கின் சொத்து மதிப்பு 78 பில்லியன்  டாலர் உயர்ந்தது. அதில் நேற்று மட்டும் மெட்டாவின் ஒரு பங்குகள் 582.77 டாலர்களில் விற்றன. இதனைத் தொடர்ந்து ஒரே நாளில் மார்க் ஜூக்கபர்கின் சொத்து மதிப்பு 343 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்கள் வரிசையில், 2 ஆம் இடத்திற்கு முன்னேறினார். அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.


டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியல் இதோ...


1. எலான் மஸ்க் -256 பில்லியன் டாலர்


2. மார்க் ஜூக்கர்பெர்க் -206 பில்லியன் டாலர்


3. ஜெஃப் பெசோஸ் -205 பில்லியன் டாலர்


4. பெர்னார்ட் அர்னால்ட் -193 பில்லியன் டாலர்


5. லாரி எலிசன் -179 பில்லியன் டாலர்


6. பில் கேட்ஸ் -161 பில்லியன் டாலர்


7. லாரி பேஜ் -150 பில்லியன் டாலர்


8. ஸ்டீவ் பால்மர் -145 பில்லியன் டாலர்


9. வாரன் பஃபெட் -143 பில்லியன் டாலர்


10. செர்ஜி பிரின் -141 பில்லியன் டாலர்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்