மார்கழி 21 திருப்பள்ளியெழுச்சி பாடல் 1 : போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 1 :
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே
பொருள் :
சேறுகள் நிறைந்த குளத்தில் பூத்த செந்தாமரை மலர்கள் நிறைந்திருக்கும் வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமானே! நந்திக்கொடியை உடையனே! என்னையும் ஆட்கொள்ள வேண்டும். என் வாழ்வின் முதல் பொருளாக இருப்பவனே, பொழுது விடிந்து விட்டது. உனது மலர் போன்ற திருவடிகளை வழிபட வந்துள்ளேன். உன்னுடைய அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்