மார்ச்23 -என்ன செய்வதற்கு உகந்த நாள்?
இன்று மார்ச் 23 வியாழக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 09
சுப முகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 09.12 வரை துவிதியை பின்பு திரிதியை திதி உள்ளது. மாலை 04.37 வரை ரேவதி நட்சத்திரம், பிறகு அஸ்வினி நட்சத்திரம். காலை 06.20 வரை மரணயோகம், பிறகு மாலை 04.37 வரை சித்தயோகம், அதன் பிறகு அமிர்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 வரை
என்ன செய்ய உகந்த நாள் ?
ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு, அரசு தொடர்பான காரியங்கள் மேற்கொள்ள, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சந்திர பகவானை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். மனம் தெளிவடையும். சந்திரனுக்குரிய அதிபதியான பெருமாளையும், ஞானத்திற்குரிய அதிபதியான தட்சிணாமூர்த்தியையும் இந்த நாளில் வழிபட நன்மைகள் பெருகும். வாழ்வில் உயர்வு ஏற்படும்.