மார்ச் 22 - இன்று யாரை வழிபட்டால் செல்வம் சேரும்?
Mar 22, 2023,09:43 AM IST
இன்று மார்ச் 22 புதன்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 08
தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி பண்டிகை), வளர்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 12.01 வரை அமாவாசை திதியும், பிறகு இரவு 10.24 வரை பிரதமை திதி, அதன் பிறகு துவிதியை திதியும் உள்ளது.மாலை 05.31 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.20 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 05.13 வரை சித்தயோகமும், பிறகு மரண யோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?
ஹோமம் செய்வதற்கு, வீடு தொடர்பான பணிகள் துவங்குவதற்கு, அபிஷேகம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் நிறைவேற்ற, குளம், கிணறு அமைப்பதற்கு, புதிய தொழில் துவங்குவதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று முருகப் பெருமானை வழிபட மேன்மை உண்டாகும். சிவபெருமானை வழிபட சகல விதமான செல்வங்களும் சேரும்.