மார்ச் 20-இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?

Aadmika
Mar 20, 2023,09:19 AM IST

இன்று மார்ச் 20 திங்கட்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 06

சிவராத்திரி, கரிநாள். தேய்பிறை, மேல்நோக்கு நாள்


அதிகாலை 04.01 வரை திரியோதசி திதியும் பிறகு சதுர்த்தசி திதி உள்ளது. இரவு 07.25 வரை சதயம், பிறகு பூரட்டாதி நட்சத்திரம். இரவு 07.25 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் : 


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 0730 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


இன்று என்ன செய்ய நல்ல நாள்?


மருந்துகள் செய்வதற்கு, கடனை அடைப்பதற்கு, நீர்நிலை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, கால்நடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நல்ல நாள்.


இன்று யாரை வழிபட வேண்டும்?


திங்கட்கிழமையில் வரும் தேய்பிறை சிவராத்திரி இன்று. சோமவார சிவராத்திரி என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் சகல விதமாக ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.