மார்ச் 19 - இன்றைய நாளுக்கு என்ன சிறப்பு தெரியுமா ?

Aadmika
Mar 19, 2023,09:27 AM IST

இன்று மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை

சுபகிருது ஆண்டு, பங்குனி 05

தேய்பிறை, பிரதோஷம், மேல்நோக்கு நாள்


அதிகாலை 03.57 வரை துவாதசி, பிறகு திரியோதசி திதி துவங்குகிறது. காலை 08.53 வரை அவிட்டம், பிறகு சதயம் நட்சத்திரம். காலை 06.21 வரை சித்தயோகம், பிறகு இரவு 08.53 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம்.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?


அபிஷேகம் போன்ற வேண்டுதல் நிறைவேற்ற, தோட்டம் அமைக்க, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள ஏற்ற நாள்.


இன்று என்ன ஸ்பெஷல் ?


இன்று ஞாயிற்றுகிழமையில் வரும் பிரதோஷம். அதுவும் ராகு காலமும், பிரதோஷ காலமும் ஒன்றாக வருகிறது இந்த சமயத்தில் சிவ பெருமானையும் நந்தியம் பெருமானையும் வழிபட்டால் காரிய தடைகள் விலகும். கிரக தோஷங்கள், கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.