மார்ச் 16 - இன்று எந்தெந்த காரியங்களை செய்வதற்கு உகந்த நாள்?

Aadmika
Mar 16, 2023,10:16 AM IST

இன்று மார்ச் 16 வியாழக்கிழமை.

சுபகிருது ஆண்டு பங்குனி 02, கீழ்நோக்கு நாள்


பிற்பகல் 1.21 வரை நவமி, பிறகு தசமி திதி உள்ளது. அதிகாலை 03.15 வரை மூலம், பிறகு பூராடம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 03.15 வரை மரணயோகம், பிறகு காலை 06.23 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் வாய்கிறது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 11.30 முதல் 12 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 வரை


இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?


கணிதம் பயிலுவதற்கு, சுரங்கம் அமைப்பதற்கு, கடன் வாங்குவதற்கு ஏற்ற நாள்.


இன்று யாரை வழிபட வேண்டும்?


இன்று வியாழக்கிழமை என்பதனால் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் எண்ணத் தெளிவு உண்டாகும். ஞானம் பெருகும்.