மார்ச் 15 - இன்றைய நாளின் மகத்துவம் என்ன ?
இன்று மார்ச் 15, புதன்கிழமை.
சுபகிருது வருடம், பங்குனி 01.நவமி, கீழ்நோக்கு நாள்
காரடையான் நோன்பு
மாலை 03.24 வரை அஷ்டமில பிறகு நவமி. மாலை 03.25 துவங்கி, மார்ச் 16 ம் தேதி பிற்பகல் 01.21 வரை நவமி திதி உள்ளது. இன்று அதிகாலை 04.36 வரை கேட்டை நட்சத்திரம், பிறகு மூலம் நட்சத்திரம். காலை 04.36 வரை சித்தயோகமும், பிறகு 06.23 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரண யோகமும் வருகிறது.
நல்ல நேரம் :
காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
இன்று கீழ்நோக்கு நாள் என்பதால் கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு,விதை விதைக்க, பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏற்ற நாள். இன்று காரடையான் நோன்பு என்பதனால் சுமங்கலி பெண்கள் தாலி சரடினை மாற்றிக் கொள்ள உகந்த நாள்.
இன்றைய நாளுக்கு என்ன சிறப்பு?
இன்று அம்பிகையை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். காரடையான் நோன்பு என்பதனால் காமாட்சி அம்மன் அல்லது மீனாட்சி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் இட்டு வந்தால் கணவன் - மனைவி ஒற்றுமை சிறக்கும்.