நீதித்துறையில் தலையிட முயற்சிக்கிறது மத்திய அரசு .. மமதா பானர்ஜி சாடல்

Su.tha Arivalagan
Jan 18, 2023,04:43 PM IST
கொல்கத்தா: நீதிபதிகள் நியமனத்தில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மத்திய அரசு கேட்பது நீதித்துறை  நடவடிக்கைகளில் தலையிடும் செயல் என்று மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.



நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியத்தில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று மத்திய அரசு  கோரியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், கொலீஜியம் முறையை சீர்குலைக்க மத்தியஅரசு முயல்கிறது. அதில் தனது பிரதிநிதியை இணைக்க மத்திய அரசு விரும்புவது சரியல்ல. இது நீதித்துறை நடவடிக்கையில் தலையிடும் செயலாகும். நீதிமன்றங்களின் செயல்பாட்டில் தலையிட மத்திய அரசு விரும்புகிறது.

நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்க வேண்டும். நீதித்துறைக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்.  மத்திய அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டால்  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசுகள் தலையிடும் நிலை வரும், இதனால் நீதிபதிகள் நியமனமே கேலிக்கூத்தாகி விடும், எந்த மதிப்பும் இருக்காது என்றார் அவர்.