மாட்ரிட் வீதிகளில்.. ஜாலியாக சேலையில் ஜாகிங் செய்த மமதா பானர்ஜி!
மாட்ரிட்: மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி மாட்ரிட் நகரில் சேலையில் ஜாகிங் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்காள முதல்வரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி 10 நாள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஸ்பெயின் சென்றுள்ள அவர் தலைநகர் மாட்ரிட் நகரில் காலையில் தனது குழுவினரோடு ஜாகிங் செய்துள்ளார். வழக்கம் போல சேலையிலேயே அவர் ஜாகிங் செய்தது அந்தப் பகுதியில் போனோர் வருவோரை ஆச்சரியப்படுத்தியது.. யார் இவர் என்று அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மமதா எதையும் கண்டு கொள்ளாமல் ஜாலியாக ஜாகிங் செய்துள்ளார். அதுதொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார்.
சமீபத்தில் கூட டிரெட்மில்லில் சேலை கட்டியபடியே அவர் உடற்பயிற்சி செய்து அந்த வீடியோவைப் போட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம். எந்த காஸ்ட்யூமில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல.. நமது உடல் நலனைக் காக்க உடற்பயிற்சி செய்கிறோமா என்பதுதான் முக்கியம்.. நான் பண்றேன் நீங்களும் தவறாமல் உடற்பயிற்சி பண்ணுங்க என்பதுதான் மமதா பானர்ஜி தரும் மறைமுக மெசேஜ்!