மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!

Manjula Devi
Mar 20, 2025,04:48 PM IST

சென்னை:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.


இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கையில்,




மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. 


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தலைமையில், கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் வரும் 22-03-2025 சனிக்கிழமை அன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.


காலை சுமார் 10:30 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள். இதற்கான அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம்  வெளியிட்டுள்ளார்.