Coolie movie update: ஷூட்டிங் ஓவர்மா.. கூலாக வீடியோ போட்டு.. ரசிகர்களை குஷியேற்றிய கூலி டீம்!

Manjula Devi
Mar 18, 2025,04:56 PM IST

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும். இவர் இயக்கி வெளியே வந்த விக்ரம், லியோ போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து ரசிகர்களை ஈர்த்தது.

அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். 


மேலும் இப்படத்தின் இன்னொரு சிறப்பு என்றால் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த்தின் கூலி   படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் பிளஸ் அனிருத் காம்போவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு  ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எகிறி உள்ளது. 




சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், தேவா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் ஷோபின் சாகிர் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என இப்படத்தில் வெவ்வேறு மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். 


இது மட்டுமல்லாமல் நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். ஜெயிலர் படத்தில் தமன்னா ஆ்டியிருந்தார். இப்போது பூஜா ஹெக்டே ஆடியுள்ளார். எனவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படி, கூலி படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் மூழ்கச் செய்துள்ளது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ஆவலும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 


இந்த நிலையில் கூலி படம் குறித்த மற்றொரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம்.  

அதன்படி, ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தாக அறிவித்துள்ளது.அதேபோல் 20 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் உற்சாகத்தில் வலம் வருகின்றனர். இப்படம் மே மாதம் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கு அமேசான் பிரைம் நிறுவனம் 120 கோடி விலைக்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது.


கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.