மே 2.. மதுரை மீனாட்சிக்குக் கல்யாணம்..  மங்களம் பெருகட்டும்!

Aadmika
May 02, 2023,09:25 AM IST


இன்று மே 02, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 19

வளர்பிறை, மேல் நோக்கு நாள்

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்


இரவு 11.13 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 07.33 வரை உத்திரம் நட்சத்திமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 05.57 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.33 வரை அமிர்தயோகமும் , அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


தாலி சரடு மாற்றிக் கொள்ள நல்ல நேரம் - காலை 08.35 முதல் 08.59 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


அபிஷேகம் போன்ற வழிபாடு, நேர்த்திக்கடன்கள் செய்வதற்கு, சிலைகளை வடிவமைப்பதற்கு, மரங்கள் நடுவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற நாள். 


யாரை வழிபட வேண்டும் ?


மதுரை மீனாட்சி அம்மனை வழிபட வாழ்வில் மங்களங்கள் பெருகும். குடும்ப ஒற்றுமை மேம்படும்.