"நான்தான் திருமணம் செய்து வைத்தேன்".. மாரிமுத்து மறைவுக்கு வைரமுத்து கண்ணீர் அஞ்சலி!

Meenakshi
Sep 08, 2023,05:17 PM IST
சென்னை:  தேனியில் நான்தான் திருமணம் செய்துவைத்தேன் இன்று அவன்மீது  இறுதிப் பூக்கள் விழுவது கண்டு இதயம் உடைகிறேன்  என்று நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் மாரிமுத்து, கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றி தனது வாழ்க்கையை  துவக்கியவர். பிறகு படிப்படியாக உயர்ந்து நடிகர், இயக்குனர் என வளர்ந்தவர்.  தற்போது சினிமாக்களிலும், சின்னத்திரை சீரியல்கள் சிலவற்றிலும் நடித்து வந்தார். இன்று காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரிமுத்துவிற்கு திடீரென பயங்கர நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.



மாரிமுத்துவின் இந்த திடீர் மரணத்திற்கு சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.  கவிஞர் வைரமுத்துவின் பிரியத்துக்குரியவர் மாரிமுத்து. அவரிடம்தான் முதல் முறையாக மாரிமுத்து உதவியாளராகச் சேர்ந்தார். அவரது அன்பைப் பெற்றவர். வைரமுத்துவிடமிருந்துதான் மாரிமுத்துவின் திரையுலகப் பயணம் தொடங்கியது.

மாரிமுத்து மறைவு தொடர்பாக வைரமுத்து விடுத்துள்ள கவிதை அஞ்சலி:

தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன் 

குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன் என்று கூறியுள்ளார் வைரமுத்து.

"தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன் 

குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்"

இவ்வாறு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.