வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு!

Manjula Devi
Sep 05, 2024,07:38 PM IST

சென்னை:   வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 




அதன்படி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும்.


இதன் காரணமாக இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


அதேபோல் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்