Rain: "துளி துளியாய்".. வங்கக் கடலில் உருவான "தாழ்வு".. சம்பவம் பெருசா இருக்குமாம்!
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கியுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. இருப்பினும் வெயிலும் மழையும் மாறி மாறி வருவதால் பருவ கால நோய்களும் பரவிக் கொண்டுள்ளன.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் நல்ல மழை பெய்கிறது. இந்நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையுமாம். இந்த தாழ்வானது, வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வங்கக்கடலை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.