மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாரை.. அதிரடியாக இடமாற்றம் செய்தது.. தேர்தல் ஆணையம்

Su.tha Arivalagan
Mar 18, 2024,03:26 PM IST

டெல்லி: மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.  மேலும் 6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்களையும் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.


தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இனிமேல் முடியும் வரை அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார்கள். அதிகாரிகள் இடமாற்றத்தை தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.




மேற்கு வங்காள மாநிலத்தில் டிஜிபி ராஜீவ் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்துறைச் செயலாளர்கள், முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


பிருஹன் மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சஹல், மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு மாநகராட்சி உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற இடமாற்றங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.