வாரணாசி தொகுதியில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.. பாஜக முதல் பட்டியல் ரிலீஸ்!

Aadmika
Mar 02, 2024,10:32 PM IST

டில்லி : 2024 லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. முதல் கட்டமாக 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாஜக.


பாஜக பொதுச் செயலாளர் வினோத் தவடே செய்தியாளர்கள் கூட்டத்தில் இதை இன்று மாலை அறிவித்தார்.  வருகிற லோக்சபா தேர்தலில் 34 மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுவதாக வினோத் தவடே அறிவித்தார். கேரளாவில் 12 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. உ.பியில் 51 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அது அறிவித்துள்ளது.




முக்கிய வேட்பாளர்கள் விவரம்:


அமைச்சர் அமித் ஷா - காந்தி நகர் (குஜராத்)

அமைச்சர் மன்சுக்பாய் மாண்டவ்யா - போர்பந்தர் (குஜராத்)

அமைச்சர் கிரண் ரிஜிஜு - அருணாச்சல் மேற்கு

அமைச்சர் சர்பானந்தா சோனோவால் - திப்ரூகர்

பிஷ்ணு பாடா ராய் - அந்தமான் நிக்கோபார்

திருவனந்தபுரம் - ராஜீவ் சந்திரசேகர்

டெல்லியில் மறைந்த சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் போட்டியிடுகிறார்


அறிவிக்கப்பட்ட மொத்த வேட்பாளர்கள்  - 195

பெண் வேட்பாளர்கள் - 28 பேர்

50 வயதுக்குட்பட்ட தலைவர்கள் - 47 பேர்

ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள் - 57 பேர்

உத்தரப் பிரதேச வேட்பாளர்கள் - 51 பேர்

மேற்கு வங்காளம் - 20

கேரளா - 12

டெல்லி - 5



தமிழ்நாட்டு வேட்பாளர்கள் யாரும் இல்லை


தமிழ்நாட்டில் பாஜக எந்தெந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறது, எந்த தொகுதியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட போகிறார் என்ற அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் இதுதொடர்பாக வெளியாகவில்லை.


தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை என்பதால் இந்த முடிவு என்று தெரிகிறது. பின்னர் தமிழ்நாடு குறித்த அறிவிப்பை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது.