மதுபான கொள்கை வழக்கில்.. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன். . உச்சநீதிமன்றம்

Meenakshi
Jul 12, 2024,11:58 AM IST

டில்லி:  மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.


மது விலக்குக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவர் கவிதா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய வரலாற்றிலேயே முதலமைச்சர் பதவி வகித்து வரும் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறும் அமவிற்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது பரபரப்பாக பேசப்பட்டது. 




கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் வெஜ்ரிவால், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் நடந்தது. பின்னர் அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக தற்காலி ஜாமீன் வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் அவர் மீண்டும் சிறையில் சரணடைந்தார். இந்த நிலைியல் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.


தீர்ப்பின்போது கைது செய்யப்பட்டு 90 நாட்களாகி விட்டதால் இடைக்கால ஜாமீன் அளிப்பதாக கோர்ட் உத்தரவிட்டது. மேலும் முதல்வர் பதவியில் நீடிக்கலாமா இல்லையா என்பதை கெஜ்ரிவால் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். இதுதவிர கெஜ்ரிவால் வழக்கின் சில முக்கிய அம்சங்கள் குறித்து விசாரிக்க பெரிய அமர்வுக்கு வழக்கை மாற்றியும் கோர்ட் உத்தரவிட்டது.