Leo Trailer: வேற லெவல் வெறித்தனம்.. விஜய்யின் சம்பவம்.. குஷியின் உச்சத்தில் ரசிகர்கள்

Meenakshi
Oct 05, 2023,06:36 PM IST

சென்னை: உலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள்.. உற்சாகக் கொண்டாட்டத்தின் உச்சத்துக்கேப் போய் விட்டனர்.. அத்தனை பேரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த லியோ டிரைலர் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. வெறித்தனமான சம்பவத்தை லோகோஷும், விஜய்யும் இணைந்து செய்திருப்பதை கோடிட்டுக் காட்டி ரசிகர்களை தெறிக்க விட்டு விட்டது டிரைலர்.


ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதால், ஏமாற்றம் அடைந்த  ரசிகர்களுக்கு எனர்ஜி அளிக்கும் வகையில் லியோ டிரெய்லர் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியானது. ரசிகர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்வகையில் படம் முழுக்க ஏகப்பட்ட சம்பவங்களை செய்திருக்கிறார்கள் என்பது டிரைலரைப் பார்த்தாலே தெரிகிறது.




விஜய் வேற லெவலில் காட்சி தருகிறார்.  அத்தனை காட்சியும் நாடி நரம்புகளைப் புடைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் படங்களை தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவுக்கு வெறித்தனமாக இருக்கிறது படம் என்பதை டிரைலர் வெளிப்படுத்துகிறது. விஜய் படு கூலாக காட்சி தருகிறார். இசை தெறிக்க வைக்கிறது. 


லியோ டிரைலர் 





லியோ டிரைலரை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தியேட்டர்களில் டிரைலரை நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். அங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து டிரைலரை கண்டு களித்து மகிழ்ந்தனர். சமூக வலைதளங்கள் திண்டாடிக் கொண்டுள்ளன. காரணம் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டுள்ளதால்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் நடித்துள்ள திரைப்படம் லியோ.  அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 19ம் தேதி படம் திரைக்கு வருகிறது.