லியோ.. அதிகாலை 4 மணி ஷோ கோரி.. பட குழு வழக்கு!

Meenakshi
Oct 16, 2023,03:01 PM IST

சென்னை: லியோ படத்தின் முதல் ஷோவை அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதி கேட்டு தயாரிப்பு குழு 

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.


நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் லியோ. 7 ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்   லலித் குமார். லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5 ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் லியோ வெளியாக இருக்கிறது.




லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளை அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு திரையிட  அனுமதி கேட்டு பட தயாரிப்பாளர்கள் அரசுக்கு விண்ணப்பம் அனுப்பினர். ஆனால், ஒரு மாதம் அமைதியாக இருந்த அரசு தரப்பு 5 காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. ஆனால், முதல் காட்சி 9 மணிக்குத்தான் என்று அரசு கூறி விட்டது.


மேலும் இறுதிக்காட்சியை இரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கூறியதால் படக் குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சியாகி விட்டனர். இந்த நிலையில், லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி காட்சிக்குப் பதில்,  7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் முறையீடு செய்துள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 


இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வருகிறது.