Leo FDFS.. காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி.. அரசு உத்தரவு!

Su.tha Arivalagan
Oct 13, 2023,06:18 PM IST

சென்னை:  லியோ படம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு:




லியோ படம் அக்டோபர் 19, 20, 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 5 காட்சிகளைத் திரையிடலாம்.


முதல் நாளன்று ஓபனிங் ஷோவானது அதாவது முதல் காட்சியானது காலை  9 மணிக்குத்தான் தொடங்க வேண்டும்.  கடைசிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிவடைய வேண்டும். இதை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.


லியோ படம் திரையிடப்படும் தியேட்டர்களில் விதிமுறைகள் மீறப்படாமல் இருப்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.


லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் நாட்களில் படம் பார்க்க வருவோரின் பாதுகாப்பு மற்றும் தியேட்டர்களின் பாதுகாப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 


டிக்கெட் கட்டணங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக விற்கப்படாமல் இருப்பதும் கணகாணிக்கப்பட வேண்டும். விதிமீறல் மற்றும் உத்தரவுகளை மீறி நடப்போர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.