பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் The Order Of Mubarak Al Kabeer உயரிய விருது!

Su.tha Arivalagan
Dec 22, 2024,04:46 PM IST

குவைத் சிட்டி: குவைத் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி பெறும் 20வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நாட்டின் நைட் விருது போல, இந்தியாவின் பாரதரத்னா விருது போல குவைத் நாட்டின் உயரிய விருதுதான் The Order Of Mubarak Al Kabeer விருது. அந்த விருதுதான் தற்போது பிரதமர் மோடிக்குத் தரப்பட்டுள்ளது.


வெளிநாட்டுத் தலைவர்கள், அரச குடும்பத்தினர் போன்றோருக்கு மட்டுமே இந்த விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்படும்.  இதற்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து அரசர் சார்லஸ் போன்றோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.




குவைத் நாட்டின் பாயன் அரண்மனையில் நடந்த விழாவின்போது பிரதமர் மோடிக்கு விருது அளிக்கப்பட்டது. குவைத் நாட்டின் அமீர் ஷேக் மேஷல் அல் அகமது அல் ஜாபர் அலி சபா விருதினை வழங்கிக் கெளரவித்தார். 2 நாள் பயணமாக குவைத் வந்துள்ளார் பிரதமர் மோடி. கடந்த 43 ஆண்டுகளில் குவைத்தில் சுற்றுப்பயணம் செய்யும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான்.


முன்னதாக ஷேக் சசாத் அல் அப்துல்லா உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தியர்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது அவருக்கு உற்சாகமான வரவேற்பைக் கொடுத்தனர் இந்தியர்கள்.  நேற்று ஸ்பிக் பணியாளர்கள் முகாமுக்கும் சென்று இந்தியத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்