கே.எஸ்.ராதாகிருஷ்ணன் Review: "விஜய் அரசியல்.. மிக மிக துல்லியம்.. தெளிவான வியூகம்.. கண்ணியம்"

Su.tha Arivalagan
Feb 02, 2024,06:06 PM IST

சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து மூத்த அரசியல் தலைவரும், வழக்கறிஞரும், எழுத்தாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு ரெவ்யூ போல கூறியுள்ளார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.


நடிகர் விஜய் இன்று, தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை அறிவித்துள்ளார். 2 வருடங்களில் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கருத்து:


விஜய்க்கெல்லாம் அரசியல் பற்றி என்ன தெரியும்?" என்றும்... "விஜயெல்லாம் வரட்டும்யா... வந்து என்ன பண்ணப்போறார்னு பார்ப்போம்..’’ சொன்னார்கள். உண்மையில் மிகமிக துல்லியமான திட்டமிடல், தெளிவான வியூகம், கண்ணியமான வார்த்தைப் பிரயோக அறிக்கை.. !


முதலமைச்சர் ஆகக்கூடிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்ட ரஜினிகாந்த் மற்றும் ரஜினி அளவுக்கு செல்வாக்கு இல்லாத போதும் போதிய திட்டமிடல் இல்லாமல் அரசியலுக்குள் வந்து வீழ்ந்து போன விஜயகாந்த் இருவரது வாழ்க்கையில் இருந்தும் சரியான பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது...


தனது ரசிகர்களை முழுமையான அரசியல்மயப்படுத்தி தயார்படுத்த 2 ஆண்டுகள் முன்னதாக கட்சியை அறிவித்ததிலும் மிகச்சரியான முடிவுகள்...  எல்லாவற்றையும் விட மிக முக்கியமான முடிவு... சாதாரண மக்கள் மத்தியில் விஜய் மீது ஒரு ஈர்ப்பு கொண்டுவர வைக்கும் முடிவு... தனது மார்க்கெட் உச்சத்தில் ... இன்றைக்கு ஒரு படத்திற்கு ₹150 கோடிகள் கொடுத்த தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலையில்... விஜய் நினைத்தால் வருடத்திற்கு 2 படங்கள் என்று அடுத்த 10 ஆண்டுகளுக்கு சர்வ சாதாரணமாக ₹3000 கோடிகளை தாண்டி சம்பாதிக்க வாய்ப்பிருந்தும் அதனை விட்டுவிட்டு "அடுத்த படத்துடன் திரையுலகில் இருந்து விடைபெறுகிறேன்" என்று சொன்னது மிகப்பெரிய விசயம்... அந்த அறிக்கையின் மாஸ்டர் ஸ்ட்ரோக் அதுதான்...!




இனி தமிழ்நாட்டில் திராவிடம் பேசி யாரும் பிழைக்க முடியாது... அதேபோல அதிதீவிர மதவாதம் வலதுசாரியும்  இடதும் இங்கே எடுபடாது... "தமிழ், தமிழ்நாடு முன்னுரிமை அதற்கடுத்து இந்திய தேசியம், தேசிய ஒருமைப்பாடு" இதுதான் இனி தமிழகத்தின் பாதையாக இருக்கும் என்பதை மிகச்சரியாக பிடித்துள்ளார் விஜய்...  அதுதான் வெற்றிக்கான பாதையும் கூட...!


உதயநிதி விஜய்க்கு அருகில் கூட வரமுடியாது... மொத்தத்தில் தமிழகத்தின் அத்தனை முக்கிய கட்சிகளுக்கும் பீதியை கிளப்பும் வகையில் தான் விஜய்யின் அரசியல் வருகை இருக்கிறது...


விஜய் ரசிகர்களது கடந்த 2, 3 ஆண்டுகால செயல்பாடுகளை பார்த்தால் அரசியல் பற்றிய அடிப்படை புரிதல் சிறிதளவும் இல்லாமல் இருக்கின்றனர்.. அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் தவறுகள் கூட விஜய்கட்சி மீது லேபிள் ஒட்டப்படும்... !


பெரும்பாலான மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவது தங்களது உரிமை என்று நம்பத்தொடங்கி சில ஆண்டுகள் ஆகிறது... கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலை செய்வதற்கு தினசரி சம்பளம் மற்றும் இதர செலவுகள் எதிர்பார்க்கின்ற காலம்... எம்ஜிஆர், கலைஞர் காலத்தில் எல்லாம் ஒரு டீ குடித்துவிட்டு நாள் முழுவதும் கட்சி கொடிகளை கட்டி, போஸ்டர் ஒட்டிய தொண்டர்கள் இப்போது கிடையாது.. எல்லாவற்றுக்கும் பணம்... நான் இறுதியாக போட்டியிட்ட 1996  பொதுத்தேர்தல் வரை அறம் சார்நத அரசியல் பணிகள் இருந்தன. இப்போம் எல்லாம் உழைப்புக்கு சம்பளம் என எல்லாமே பணமயமாகிவிட்டது. ஜனநாயகம் மாறி அரசியல் பண நாயகமாகி விட்டது.


அதேபோல எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கிய பின்னரும் ஆட்சியை பிடிக்கின்ற வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார்... அதன் மூலம் மக்களுடன்  கனெக்ட் ஆகவே இருந்தார்... விஜய் உடனடியாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுகிறார்... அதேநேரம் மீடியாக்களை அடிக்கடி சந்தித்தாலும் இவர் சொல்வதை வேறு மாதிரி வெட்டிஒட்டி இவருக்கு எதிராகவே மக்களிடம் பரப்பிவிடும்  சில பணம் பெறும் அயோக்கிய மீடியாக்கள்... அதனை எப்படி கையாளப் போகிறார் என்று தெரியவில்லை...


கடைசியாக ஒன்று... எனக்குத் தெரிந்து 1994 முதல் மதிமுகவில் பயணித்தும், 2005 முதல் தேமுதிகவில் பயணித்தும் சொந்த பணத்தை ஏகப்பட்ட அளவு செலவழித்து வாழ்க்கையை தொலைத்தவர்களும் 1990கள் முதல் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பி ஏராளமான பணத்தை வாரி இறைத்து கடனாளி ஆகி காணாமல் போனவர்களும் அதிகம்... அந்த வகையில் உங்களை நம்பி வரும் ரசிகர்களை சொந்த வாழ்க்கையில் தோற்க விட்டுவிடாதீர்கள்... 


ரஜினி அரசியலுக்கு வருவதாக முதல்முறை அறிவித்த 2017ல் தனது ரசிகர்களுக்கு சொன்ன "முதலில் உங்க குடும்பம், தொழில், வாழ்க்கை அதை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள்.. அதன்பிறகு நேரமும் ஆர்வமும் இருந்தால் அரசியலுக்கு வாருங்கள்" என்ற அறிவுரையை நீங்களும் உங்களை வெறித்தனமாக ரசிக்கும் ரசிகர்களுக்கு சொல்லுங்கள்...


இன்று அரசியல் தொழில், வியாபாரம் ஆகிவிட்டது. இதன் துவக்கம் கடந்த  2000….


ஆனா மக்களே....


வெளிய தன்னை ஒரு பெரிய போராளியா காமிச்சிட்டு உள்ளுக்குள்ள எல்லாரும் நல்லா சம்பாதிச்சிட்டு தான் இருக்காங்க... நாம்தான் உண்மை முகம் தெரியாமல் see more பண்ணிக்கிட்டு இருக்கோம்.


அரசியலாகட்டும் அல்லது ஒரு தொழிலாக இருக்கட்டும். அதில் அனுபவப்பட்டுப் படிப்படியாக முன்னேறி வந்து அதை ஆளுமை செய்வதோடு மக்கள் மத்தியில் தங்கள் செயலுக்கு நன்மதிப்பை பெறுவது தான் ‌ உண்மையான வளர்ச்சி போக்கு.


அதை விட்டுவிட்டு தந்தையின் தோள்களில் ஏறி வாரிசுகள்  என்ற பெயரில்  அதன் உரிமையில் உச்சபட்சமான பதவிகளுக்கு எந்த தகுதியும் இல்லாமல் சுலபமாக வந்து விடுவது அபத்தமாக மாறிவிடுகிறது ஒழிய ஒரு நன்மைக்கும் அது பொருந்துவதில்லை. எனக்கு தெரிய.. வீசப்படும் 10 ரூபாய் நோட்டுக்களைப்  பிடிக்க ஆலாய்ப்பறந்து, கோடிக்கணக்கான கரங்கள் நீளுகின்ற ஒரு தேசத்தில் என்ன சொல்ல?


நன்றி: https://twitter.com/KSRadhakrish