குரோதி தமிழ் வருட ராசிபலன் 2024.. பாகுபாடுன்றி அனைவரையும் அரவணைத்து செல்லும் மீன ராசி அன்பர்களே!
உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர்கல்வி சார்ந்த வெளியூர் பயணங்கள் உண்டாகும். செய்தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும்.
பழைய வாகனங்களை மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சாகச காரியங்களில் ஒருவித ஈர்ப்பு உண்டாகும். பேச்சுகளில் கனிவை கையாள்வது தேவையற்ற பகைமையை தவிர்க்கும். காப்பீடு துறைகளில் மேன்மை உண்டாகும். வியாபாரம் சார்ந்த அரசு உதவிகளில் தாமதம் ஏற்படும். எதிர்பாலின மக்களின் தனிப்பட்ட விஷயத்தில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். கடினமான சில பணிகளை கூட எளிதாக முடிப்பீர்கள். கூட்டாளிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்மட்ட மக்களின் அறிமுகங்களும், நட்புகளும் கிடைக்கும். பேச்சுகளில் உண்மையை கடைபிடிப்பது நம்பிக்கையை மேம்படுத்தும். கடன் பிரச்சனைகளை குறைப்பதற்கான உதவிகள் சாதகமாகும்.
வியாபாரிகளுக்கு:
சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து சில முடிவுகளை எடுப்பது நல்லது. சில புதிய முடிவுகளில் முன் நின்று செயல்படுவது தேவையற்ற விரயங்களை தவிர்க்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதுமையான திட்டங்கள் மற்றும் வியூகங்களின் மூலம் லாபத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். வேலையாட்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்க இயலும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
உத்தியோகப் பணிகளில் பொறுமையுடன் செயல்பட்டால் ஆதாயம் உண்டாகும். ஊதிய உயர்வுகள் சில போராட்டங்களுக்கு பின்பு சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு நம்பிக்கை தரும். உடலளவில் இருந்துவந்த சோர்வு படிப்படியாக குறையும். மறைமுகமான வருமான செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத இடமாற்றங்களால் விரயங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் நன்மதிப்பு ஏற்படும்.
கலைஞர்களுக்கு:
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், வேலைகளில் இருந்துவந்த தாமதங்களும் விலகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சக கலைஞர் இடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். பேச்சுக்களில் உண்மையை கடைபிடிக்கவும். மறைமுகமான போட்டிகள் விலகும். பாடல் ஆசிரியர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். வருமான நெருக்கடிகள் குறையும்.
அரசியல்வாதிகளுக்கு:
உயர் அதிகாரிகள் இடத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்பட்டால் அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில தடைகளால் விரயங்கள் ஏற்படும். பேச்சுக்களில் கனிவையும், நிதானத்தையும் கையாள்வது நல்லது. நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். கட்சிப் பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும்.
பெண்களுக்கு:
குடும்பத்தில் சூழ்நிலைகள் அறிந்து விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனம் வேண்டும். சில முடிவுகளை நன்கு யோசித்த பின்பே எடுக்கவும். உத்தியோகப் பணிகளில் கவனமுடன் செயல்படவும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்வது புரிதலை மேம்படுத்தும். நேரத்திற்கு பணிகளை முடிப்பது நல்லது. சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும்.
மாணவர்களுக்கு:
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பயிற்சிகளில் சற்று கவனம் வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான மதிப்பெண்கள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். விளையாட்டு போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி சாதகமாகும்.
வழிபாடு:
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர காரிய வெற்றி ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும்.