பாஸ் பாஸ் நீங்க டீ அதிகமா குடிப்பீங்களா.. ஒரு நிமிசம்.. இத படிச்சுட்டு அப்புறம் "குடிங்க"!

Meenakshi
Dec 16, 2023,05:15 PM IST

தைபே சிட்டி: ஒரு கல்லு, 2 கல்லுன்னா பரவாயில்லை.. நூற்றுக்கணக்கில் இருந்தால் எப்படி இருக்கும்.. தைவான் நாட்டில் ஒரு பெண்ணின் சிறுநீரகத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை டாக்டர்கள் கண்டுபிடித்து நீக்கியுள்ளனராம்.


சரியா தண்ணி குடிக்காட்டி கிட்னில கல் வரும்னு கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் இந்தப் பெண்ணுக்கு ஏன் வந்துச்சுன்னு தெரியுமா? .. அந்த பெண் அதிகளவில் டீ குடித்தது தான் காரணமாம். இப்ப தெரியுதா நான் ஏன் ஒரு நிமிஷம் இருங்கனு சென்னேன்னு.. பதறாம  தொடர்ந்து படிங்க பாஸு!


மனிதனுக்கு தற்போதைய காலகட்டத்தில் வரும் வியாதிகள் எல்லாம் வித்தியாசமாகத்தான் வருகின்றன. இவற்றிற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நம்முடைய உணவு முறையாகும். பழங்காலத்தில் இருந்த உணவு முறை வேறு, தற்பொழுது இருக்கும் உணவு முறை வேறு. 


பீட்சா, பர்கர், சவர்மா மற்றும் தற்போது பிராய்லர் கோழி  போன்ற  உணவுகள் மனிதனுக்கு நல்லது செய்கின்றதோ இல்லையோ கெட்டதை அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாருங்க நம்ம நாக்கு இருக்குல்ல நாக்கு.. அதுக்கு இது மாதிரி கெட்ட மேட்டராதான் கேட்குது. அதைத்தான் மனசும் தேடுது. சாப்பிடாதே உடம்புக்கு ஆகாதுன்னு மனசு சொன்னாலும்.. புத்திக்கு அது எட்டுவதில்லை.. எல்லாத்தையும் விட்டு விட்டு ஜொள்ளு வடிய அந்தப் பக்கமாத்தான் மனசு போகுது.




நம் உடம்பிற்கு தேவையான நீரினை நாம் பெரும்பாலும் அருந்துவது இல்லை. ஏன் தெரியுமா? இதற்கு முக்கிய காரணம் மாறி வரும நம் வாழ்க்கை முறை தான் காரணம். தற்பொழுது உள்ள கால கட்டத்தில் யாரும் நடப்பது கூட கிடையாது. ஏசியில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, எங்கு சென்றாலும் வாகனத்தை பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது. இதன் காரணமாக உடல் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாக மாறி வருகிறது.


பொதுவாக நாம் தண்ணீர் அருந்தாவிட்டால் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறாது. அவை சீறுநீரகத்தில் தங்கி கல்லாக மாறி பெரும் பிரச்சனையை ஏற்படும். இவ்வாறு உருவாகும் ஒரு சில கற்களை மருத்துவர்கள் மருந்துகள் மூலம் கரைக்கின்றனர். இதுவே பெரிய கற்களாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்து அகற்றுகின்றனர். இப்படித்தான் ஒரு பெண் தண்ணீருக்கு பதிலாக டீ மட்டுமே குடித்து வந்துள்ளார். அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? 


கிட்டதட்ட 300 மேற்பட்ட கற்கள் அந்த பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்துள்ளது. கேட்கவே அதிர்ச்சியா இருக்கா? இது உண்மை தான் பாஸ். சமீபத்தில் தைவான் நாட்டை சேர்ந்த சியோபு என்ற 20 வயது இளம் பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி வந்துள்ளது. இதையடுத்து அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுநீரகத்தில் நிறைய கற்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.


உடனடியாக அவருக்கு  அறுவைச் சிகிச்சை செய்து 300க்கும் மேற்பட்ட குட்டியான, பெரிதான கற்களை எடுத்தனர்.  சியோபு தண்ணீர் குடிக்கும் பழக்கம்  இல்லாதவர். ஆதலால், தாகம் எடுக்கும் போது எல்லாம் தண்ணீருக்கு பதிலக பபிள் எனப்படம் டீ வகையை மட்டும் அதிகமாக குடித்து வந்துள்ளார். அதனால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற தேவையான நீர் சத்து இல்லாததினால் கற்கள் உருவாகியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


சிங்கிள் டீ போதும்ண்ணே.. நான் பாட்டுக்கு எல்லா வேலையையும் பார்த்துருவேன்ல என்று சவடாலாக யாராவது பேசினால் உடனே மாத்திக்கங்கப்பா உங்க ஹேபிட்டை.. இல்லாட்டி சியோபுவுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும்!