அருணாச்சல் பிரதேச மாநிலத்தில்.. பிறந்தது புதிய மாவட்டம்.. ஆக மொத்தம் 26!
இடாநகர்: சீனாவுடனான எல்லைப் புற மாநிலமான அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் புதிதாக ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தின் 26வது மாவட்டமாகும்.
கீழ் சுபான்ஸ்ரீ மாவட்டத்தைப் பிரித்து புதிதாக கெயி பன்யார் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும்பான்மையாக வசித்து வரும் நியிஷி இன மக்கள் இந்த புதிய மாவட்டத்தை நீண்ட காலமாக கோரி வந்தனர். இந்த கோரிக்கையை தற்போது நிறைவேற்றியுள்ளது அருணாச்சல் பிரதேச மாநில அரசு.
புதிய கெயி பன்யார் மாவட்டத்தின் தலைநகராக கபின் சாம் சார்த் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டம் பிறந்துள்ளதன் காரணமாக இப்பிராந்தியத்தின் வளர்ச்சியும், முன்னேற்றமும் இனி பிரகாசமாக இருக்கும் என்று முதல்வர் பெமா கந்து கூறியுள்ளார்.
அடுத்த வாரம் மேலும் ஒரு மாவட்டம் இங்கு உருவாக்கப்படவுள்ளது. அந்த மாவட்டத்தின் பெயர் பிகாம். இது அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் 27வது மாவட்டமாக இருக்கும்.