அச்சச்சோ.. இனி "முறைப்பெண்.. முறைப்பையனை..  கல்யாணம் கட்ட முடியாது".. எங்கே தெரியுமா?!

Meenakshi
Feb 08, 2024,05:46 PM IST

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இனி திருமணங்களும், இருவர் இணைந்து வாழும் வாழ்க்கையும் அத்தனை சுகமாக இருக்காது, ஸ்மூத்தாக இருக்காது. அந்த அளவுக்கு கிடுக்குப் பிடியான பல அம்சங்கள் பொது சிவில் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநில சட்டசபையில்  பொதுசிவில் சட்ட மசோதா நேற்று நிறைவற்றப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022 சட்ட சபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக அரசின் வாக்குறுதியில் ஒன்றான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 


இதற்காக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்  ஒரு குழு அமைக்கப்பட்டு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதற்கு மாநில அரசும் ஒப்புதல் தந்ததை தொடர்ந்து பொது சிவில் சட்டம் மசோதாவை நிறைவேற்றுவதற்கான சிறப்பு கூட்டம் தொடங்கப்பட்டது. சிறப்பு கூட்டத்தின் விவாதத்திற்கு பின் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நேற்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு  மத்தியில் நிறைவேற்றப்பட்டது.




இது குறித்து சட்டப்பேரவையில்  உத்தரகாண்ட் முதல்வர் பேசுகையில்,  இது சாதாரண சட்டம் அல்ல. அனைத்து மதங்களிலும் உள்ள ஆண்களும் பெண்களும் சமமான சட்டங்களை உருவாக்கும் பாரபட்சம் மட்டும் பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்க உதவும் சட்டமாகும். குறிப்பாக, பெண்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களின் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்டம். இந்த சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம். பிரதமர் மோடி தலைமையில் கீழ் வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப உத்தரகண்ட் மாநிலத்தின் சிறிய பங்களிப்பு இது என்றார்.


இந்த சட்டத்தில் பல அதிரடியான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சிலவற்றை ஓகேதான் என்றாலும் கூட பல விஷயங்கள் அதிர வைப்பதாக உள்ளது. சட்ட மசோதாவில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்.


யார் யாரையெல்லாம் திருமணம் செய்யத் தடை என்பது குறித்து ஒரு பட்டியலே இடம் பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள தடை செய்யப்ட்ட திருமண உறவு முறைகள் விவரம்:


அம்மா 

தந்தையின் விதவை மனைவி 

தாயின் தாய் 

தாய்வழி தாத்தாவின் விதவை மனைவி

தாய் வழி பாட்டியின் தாய்

தாய் வழி பாட்டியின் தந்தை விதவை மனைவி 

தாய் வழி தாத்தாவின் தாய் 

தாய் வழி தாத்தாவின் தந்தையின் விதவை மனைவி

தந்தையின் தாய் 

தந்தை வழி தாத்தாவின் விதவை மனைவி 

தந்தை வழி பாட்டியின் தாய் 

தந்தையின் வழி பாட்டின் தந்தையின் விதவை மனைவி 

தந்தை வழி தாத்தாவின் தாய்

தந்தை வழி தாத்தாவின் தந்தையின் விதவை மனைவி 

மகள்

மகளின் கணவன்

மகள் வழி பேத்தி 

மகள் வழி பேரனின் மகனின் விதவை மனைவி

மகன் வழி பேத்தி 

மகன் வழி பேரனின் விதவை மனைவி

மகன் வழி பேத்தியின் மகள் 

மகள் வழி பேத்தியின் மகனின் விதவை மனைவி

மகள் வழி பேரனின் மகள் 

மகள் வழி பேரனின் மகனின் விதவை மனைவி 

மகன் வழி பேத்தியின் மகள்

மகன் வழி பேத்தியின் மகனின் விதவை மனைவி

மகன் வழி பேரனின் மகள் 

மகன்கள் வழி பேரனின் மகனின் விதவை மனைவி 

சகோதரி 

சகோதரியின் மகள் 

சகோதரனின் மகள் 

தாயின் சகோதரி 

தந்தையின் சகோதரி 

தந்தையின் சகோதரனின் மகள் 

தந்தையின் சகோதரியின் மகள் 

தாயின் சகோதரியின் மகள்

தாயின் சகோதரன் மகள் ஆகியோரை திருமணம் செய்ய தடை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதுதவிர மேலும் உள்ள சில அம்சங்கள்:




இரு  தார மணம், பல தார மணம் தடை செய்யப்படுகின்றன.


லிவ் இன் எனப்படும் திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் முறை தடை செய்யப்படுகிறது.  பதிவு செய்து விட்டுத்தான் இந்த உறவைத் தொடர முடியும். பதிவு செய்யாவிட்டால் கடும் தண்டனை கிடைக்கும்.


ஆண், பெண் திருமண விவாகரத்து முறை, முறைப்படுத்தப்படுகிறது.


திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.


திருமண உறவில் பிறந்த குழந்தையாக இருந்தாலும், திருமணம் செய்யாமல் பிறந்த குழந்தையாக இருந்தாலும் இனி அவர்கள் சமமாகவே கருதப்படுவார்கள். அதேபோல தத்தெடுத்த குழந்தைகளும் இவர்களும் சமமாக கருதப்படுவார்கள்.


சொத்துக்களுக்கு இனி ஆண்களைப் போல பெண்களும் சமமான வாரிசாக கருதப்படுவார்கள். அதாவது சொத்தில் ஆண், பெண் சம உரிமை உண்டு (பல பத்தாண்டுகளுக்கு முன்பே இது தமிழ்நாட்டில் அமலுக்கு வந்து விட்டது நினைவிருக்கலாம்)


உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகையில் 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பழங்குடியின மக்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுக்குப் பேசாம பேச்சலராவே இருந்துரலாம் போலயே!