பெற்ற குழந்தைகளை பாலியலில் ஈடுபடுத்திய தாய்.. "தாய்மைக்கு அவமானம்".. 40  வருட சிறை!

Su.tha Arivalagan
Nov 28, 2023,06:59 PM IST
- மஞ்சுளா தேவி

திருவனந்தபுரம் : கேரளாவைச் சேர்ந்த பெண் தனது இரு மைனர் மகள்களையும், தனது லிவ் இன் பார்ட்னர்களை வைத்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய சம்பவத்தில் அந்தத் தாய்க்கு 40 வருட சிறைத் தண்டனை கொடுத்துள்ளது கேரள விரைவு நீதிமன்றம் ஒன்று.

இந்தப் பெண் தாய்மைக்கே மிகப் பெரிய அவமானம்.. கருணைக்கு தகுதியற்றவர் என்று தீர்ப்பளித்த  நீதிபதி ரேகா கடுமையான கருத்தை தெரிவித்துள்ளார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் மன நலம் பாதிக்கப்பட்டவர். இதனால் தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு தனது கணவரை விட்டுப் பிரிந்து விட்டார் அப்பெண். அவருக்கு இரண்டு காதலர்கள் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தா். அப்போது அந்தக் காதலர்களின் விருப்பத்து உட்பட்டு தனது இரு மைனர் வயது மகள்களையும் அந்த கொடூரர்களுக்கு இரையாக்கியுள்ளார்.

அப்பெண்ணின் இரு காதலர்களும் பலமுறை அந்த சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாமல் அந்தக் குழந்தைகள் தாயிடம் கூறியுள்ளனர். ஆனால் அவரோ இதை கண்டு கொள்ளவில்லை.  தாய் தங்களுக்கு உதவவில்லை என்பதால் இரு சிறுமிகளும் தாயிடமிருந்து தப்பி வந்து, தன் பாட்டியிடம் நடந்த எல்லாவற்றையும் கூறினார்கள். அதிர்ச்சி அடைந்த பாட்டி குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.



இதன் அடிப்படையில் தாயின் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தனது இரு காதலர்களில் ஒருவரான சிசுபாலன் என்பவர் இறந்து விட்டதாகவும் ,இன்னொருவர் பற்றி விவரம் எதுவும் தெரியவில்லை எனவும் அப்பெண் கூறினார். மேலும் தனது இரண்டு குழந்தைகளையும் ஏழு வயதிலிருந்தே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக ஒத்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து அந்தப் பெண் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர் ரேகா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அந்தப் பெண்ணுக்கு 40 வருட சிறைத் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அப்போது நீதிபதி கூறுகையில், இந்தப் பெண் தாய்மைக்கு அவமானம்.. கருணைக்கு தகுதியற்றவர் என்று கடுமையாக தெரிவித்தார்.

ஒரு தாய் தான் பெற்ற பிள்ளைகளுக்கு பாதுகாப்பு.  குறிப்பாக மகள்களு்கு. ஆனால் இங்கு அந்தத் தாயே இது போன்ற அநீதிகளில் ஈடுபட்டால் அந்த குழந்தைகள் எங்கு போவார்கள். தயவுசெய்து பெண் பிள்ளைகளை மதியுங்கள் ..அவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை திணிக்காதீர்கள்.. இது மிகவும் கொடுமையான குற்றம்.. இதுபோல பல சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது . இதுபோன்ற பாலியல் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு சட்டங்கள் வகுக்க வேண்டும். மேலும் இதைப்பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும். இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இது மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.