கடும் சோர்வு.. இப்பத்தான் வெளிச்சத்தையே பார்க்கிறேன்.. என்னாச்சு ஜோதிமணிக்கு!

Meenakshi
Oct 03, 2023,12:18 PM IST

கரூர்: கடுமையான  காய்ச்சலில் வீழ்ந்த கரூர் எம்பி ஜோதிமணி இப்போதுதான் உடல் நலம் தேறி வந்துள்ளார்.


உடம்பு தேறி விட்டது. ஆனால் உடல் சோர்வு போகவில்லை என்று கூறியுள்ள ஜோதிமணி, பனிரெண்டு நாட்களுக்குப் பின் இன்று தான் வெளிச்சத்தையேப் பார்க்கிறேன் என்றும் டிவீட் போட்டுள்ளார்.


ஜோதிமணி  ஒரு எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் ஒரு சமூக சேவகர். மிக மிக ஆக்டிவாக செயல்படும் தமிழ்நாட்டு எம்.பிக்களில் முக்கியமானவர், முக்கியமாக ஃபைட்டர். 2019ம் ஆண்டு கரூர் மக்களவைக்கு காங்கிரஸ் சார்பாக தேர்தெடுக்கப்பட்டவர். தனது 22வயதில் இருந்து அரசியலில் செயல்பட்டு வருகிறார். 


கடந்த 12 நாட்களுக்கு முன்னர் கடுமையான காய்ச்சல் உடல் சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஜோதிமணி. சிகிச்சையின் பலனாக தற்பொழுது உடல் தேறிவரும் நிலையில் பணிக்கு திரும்பப் போவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், பனிரெண்டு நாட்களுக்குப் பின் இன்றுதான்  உடலில் வெளிக்காற்றும், சூரிய ஒளியும் பட்டிருக்கிறது. கடுமையான காய்ச்சல் மிக மோசமான உடல் சோர்வு, இந்த சூழலில் அதிகம் வரும் அம்மாவின் நினவுகள் ஏற்படுத்துகிற மனச்சோர்வு  என்று 12 நாட்களைக் கடப்பது ஒரு யுகம் போல இருந்தது. 


இன்னும் உடல் சோர்வு இருக்கிறது. இம்மாதிரியான சூழலில் மனவலிமையும் மருந்தாக இருக்கும் என்பதை கடந்த காலங்களில் உணர்ந்திருக்கிறேன். அதனால் இன்று எப்படியிருந்தாலும் பணியைத் துவங்குவது என்ற முடிவோடு நடைபயிற்சிக்கு கிளம்பினேன். 


அன்பான  சிரித்த முகங்கள், நல்ல காற்று,வெளிச்சம் மனதை லேசாக்கி இருக்கிறது. மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொண்ட அன்புச் சகோதரர் மருத்துவர் சிவக்குமார், மருத்துவர் ஹேமா மற்றும்  மருத்துவ குழுவினர்  அனைவருக்கும்  நன்றி என தெரிவித்துள்ளார்.