கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?

Swarnalakshmi
Dec 12, 2024,10:53 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே வீடு முழுவதும் தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கார்த்திகை தீபத் திருநாளுக்கு மற்றொரு ஸ்பெஷலும் உண்டு. அது கார்த்திகை அன்று சிவ பெருமானுக்கு நைவேத்தியமாக படைக்கும் கார்த்திகை பொரி தான்.


தீபங்கள் ஏற்றி வைத்து, நைவேத்தியமாக நெல் பொரி, பொரி உருண்டை ஆகியவற்றை சிவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றம் உள்ளது.




சிவ பெருமான் நெருப்பு வடிவமாக காட்சி தந்தவர். அவருடைய நெற்றிக் கண்ணில் இருந்து உருவான நெருப்பு பொரியில் இருந்து தோன்றி, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் தான் முருகப் பெருமான். பொரி என்றால் வித்து என்றும் ஒரு பொருள் உண்டு. அதாவது தோற்றத்தின் ஆரம்ப கர்த்தா. அப்படி உலக உயிர்கள் அனைத்திற்கும் ஆரம்ப கர்த்தாவாக, வித்தாக விளங்குபவர் சிவ பெருமான் என்பதை உணர்த்துவதற்காகவே அன்றை தினம் பொரியை அவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடுகிறோம்.


நம் வீடுகளில் தீபங்கள் ஏற்றும் போது அதில் இருக்கும் அக்னியில் சிவன், முருகன், பார்வதி தேவி, கார்த்திகை பெண்கள் ஆகியோர் எழுந்தருள் செய்வதாக ஐதீகம்.


அவர்களின் அருளை பெற பொரி நைவேத்தியமாக படைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூ இவை அனைத்தையும் வைத்து தீப, தூப ஆராதனை காட்டி வழிபட, எல்லாம் வல்ல பரம்பொருளான சிவ பெருமான் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்