அமைச்சர்களுக்கு ரூ.10 கோடிக்கு இன்னோவா கார்.. கெத்து காட்டும் கர்நாடகா!

Aadmika
Sep 02, 2023,11:03 AM IST
பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள 33 அமைச்சர்களுக்கு ரூ.10 கோடி செலவில் 33 இன்னோவா கார்கள் வாங்க கர்நாடக அரசு முடிவு செய்து, பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கி உள்ளது.

கார்ங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் அரசு செலவில் புதிதாக பதவியேற்றுள்ள 33 அமைச்சர்களுக்கும் 33 டெயாட்டோ இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் எஸ்யூவி ரக கார்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 



டெண்டர் ஏதும் விடப்படாமல் நேரடியாக இந்த கார்களை வாங்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இன்னோவா ஹைகிராஸ் காரின் பெங்களூரு ரோட் ரேட் ரூ.39 லட்சம் ஆகும். இவ்வளவு செலவு செய்து அமைச்சர்களுக்கு அரசு செலவில் காஸ்ட்லி கார் வாங்குவது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், "இதில் என்ன தவறு இருக்கிறது? அமைச்சர்களின் பாதுகாப்பு முக்கியம். அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். நம்மிடம் சாட்டர்டு ஃபிளைட்களோ, ஹெலிகாப்டர்களோ கிடையாது. அதனால் மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கும் அமைச்சர்கள் கார்களையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இப்போது வரை நான் வழக்கமான கமர்சியல் விமானத்தில் தான் பயணம் செய்கிறேன்" என அமைச்சர்களுக்கு காஸ்ட்லி கார்கள் வாங்குவதை நியாயப்படுத்தி பேசி உள்ளார் கர்நாடக துணை முதல்வர் ஷிவகுமார்.

கர்நாடக அரசின் மிகவும் காஸ்ட்லி திட்டமான கிரக லட்சுமி எனப்படும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் துவங்கப்பட்ட 2 நாட்களிலேயே கர்நாடக காங்கிரஸ் அரசு இத்தனை பெரிய தொகைக்கு காஸ்ட்லி கார்களை ஒரே செக்காக கொடுத்து வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.