தொடரும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.. காரைக்கால் மீனவர்கள் 10 பேர் கைது‌..!

Manjula Devi
Jan 09, 2025,10:30 AM IST

காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 10 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. 


இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கே சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இந்தியா வந்திருந்தார். அப்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என கூறியிருந்தனர். ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.




அந்த வகையில் நேற்று நாகையில் இருந்து காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்து வந்த இலங்கை கடற்படையினர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 10 பேரையும் அவர்கள் வைத்திருந்த விசைப்படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேஷன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்