கடலுக்குப் பக்கத்துல இருந்தா சீனியர்.. !
Jul 19, 2023,11:37 AM IST
என்ன பாஸ்.. ரொம்ப போரடிக்குதா.. கடுப்பா இருக்குதா.. வெறுப்பா இருக்கா.. அட வாங்க பாஸ். ஜாலியா நாலு ஜோக் படிச்சுட்டுப் போங்க.. கூல் ஆயிருவீங்க!
சீனியர்.. ஜூனியர்..!
ஆசிரியர் : சீனியருக்கும் ஜூனியருக்கும் என்ன வித்தியாசம் சொல்லு.
மாணவன் : ரொம்ப சிம்பிள் சார்.
ஆசிரியர் : சிம்பிளா? அது எப்படி? சரி பதிலை சொல்லு.
மாணவன் : சார்.. கடல் பக்கத்துல அதாவது "சீ நியரா" (பக்கத்துல) இருந்தா சீனியர். அதுவே மிருகக்காட்சி சாலை "ஜூ நியரா" இருந்தா ஜூனியர்!
ஆசிரியர் :???!!!
என் செருப்பையே போட்டுட்டு திரும்பினேன்
அவன்: டேய் சூப்பர் செருப்புடா.. எப்படியும் 1000 ரூபாய் இருக்கும்
இவன்: அப்படியா அப்புறம் என்னாச்சு
அவன்: கோவிலுக்கு உள்ள போறப்ப இருந்துச்சு..
இவன்: அப்பறம்
அவன்: திரும்பி வந்து பார்த்தா காணோம்.. சரி போய்த் தொலையுதுன்னு என் செருப்பையே போட்டுட்டு கிளம்பி வந்துட்டேன்!
இவன்: ???!
நான் வந்தா ஏன் கண்ணாடி போடறீங்க
மனைவி: ஆமா, என்னைப் பார்த்ததும் ஏன் உடனே கண்ணாடியை எடுத்து மாட்டறீங்க
கணவன்: டாக்டர்தான் சொன்னார்
மனைவி: என்ன சொன்னார்
கணவன்: தலைவலி வந்தா கண்ணாடி போடணும்னு!
மனைவி: ???!!!
என்ன பண்ணிட்டிருந்தீங்க
பேஷன்ட்: எனக்கு 3 நாளா இறுமல் டாக்டர்.. நிக்கவே இல்லை
டாக்டர்: அப்படியா.. ஏன் உடனே வரலை.. என்ன பண்ணிட்டிருந்தீங்க
பேஷன்ட்: இறுமிட்டிருந்தேன் டாக்டர்!