ஆன்ட்டி ஆன்ட்டி.. இது என்னான்னு சொல்லுங்க.. தெரியலையேப்பா.. நான் இந்த ஏரியாவுக்குப் புதுசு!

Su.tha Arivalagan
Apr 02, 2024,06:04 PM IST

சென்னை: காலங்கார்த்தால ஒரு வேலை இல்லாம.. அப்படின்னு ஒரு சினிமா பாட்டு இருக்குங்க.. கேட்டிருக்கீங்களா.. கொஞ்சம்.. ரொம்ப பழையப் பாட்டுதான்.. ஆனால் நல்லாருக்கும்.. ஆனா பாருங்க.. இப்படி வெயில் அடிச்சா எப்படிங்க பாட்டை ரசிக்க முடியும்.. கண்டிப்பா முடியாதுதான்.. !


அதுக்காகத்தான் ஈசியா மனசுல டைஜெஸ்ட் ஆகுற மாதிரி நாலு ஜோக்கை அள்ளிப் போட்டுக் கொண்டாந்திருக்கோம்.. 

வாங்க வந்து.. கெக்கே பிக்கேன்னு கொஞ்சம் சிரிச்சுட்டு போய் வேலைய பார்ப்போம்.




ராஜா : ஏ இங்க பாரு நிலா

ரோஜா: டேய் அது நிலா இல்லை சூரியன்

ராஜா: நல்லாப் பாரு.. அது நிலாதான்

ரோஜா: நீ நல்லாப் பாருடா.. சூரியன்தான்.. பளிச்சுன்னு தெரியுதா இல்லையா

ராஜா: இரு.. இந்தா ஒரு ஆன்ட்டி வர்றாங்க.. அவங்க கிட்டேயே கேப்போம்.. ஆன்ட்டி ஆன்ட்டி.. இது நிலாவா சூரியனா சொல்லுங்க ஆன்ட்டி.

ஆன்ட்டி: தெரியலையேப்பா.. நான் இந்த ஏரியாவுக்குப் புதுசு!


--


என்னங்க கம்ப்யூட்டருக்கு முன்னாடி உக்காந்து ஈன்னு சிரிச்சுட்டு இருக்கீங்க

மெயில் அனுப்பறேன்.

அதுக்கு ஏன் சிரிக்கறீங்க

"ஈ"மெயில் அனுப்பறேன்ல.. அதான்!


--


கல்யாணம் பண்ணிக்க முடியாத "காபி" ஒன்னு இருக்கு தெரியுமா

அது என்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது காபி.. புதுஸ்ஸா இருக்கே

லியோ காபிதான்

ஏன் அதை கல்யாணம் பண்ணிக்க முடியாது

அதுதான் ஏற்கனவே "மணமான காபி" ஆச்சே!


--




டீச்சர்: ராஜா உன்னோட ஹோம் ஒர்க்கை முடிக்க உன் அக்கா ஹெல்ப் பண்ணாளா

ராஜா: இல்லை டீச்சர்..  ஹெல்ப் பண்ணலை.. அதுக்குப் பதிலா அவளே செஞ்சு கொடுத்துட்டா!


--


அரண்மனைக் காவலன்: மன்னா.. எதிரி நாட்டு ராஜா மகாராணியாரின் அந்தப்புரத்துக்குள் நுழைஞ்சுட்டான்

மன்னன்: என்னாது.. அந்தப்புரத்துக்குள்ள வந்துட்டானா

காவலன்: ஆமாம்  மன்னா.. இப்ப என்ன பண்றது மன்னா.

மன்னன்: உடனே மகாராணியின் மேக்கப்பை கலைத்து விடச் சொல்லுங்க.. வந்த எதிரி இங்கேயே அதிர்ச்சியில் செத்துருவான்!