ஏப்ரல் 28 - இன்றைய நாளுக்குரிய பஞ்சாங்கப் பலன் என்ன ?

Aadmika
Apr 28, 2023,09:17 AM IST

இன்று ஏப்ரல் 28, 2023 வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 15

கரிநாள், அஷ்டமி, வளர்பிறை, மேல்நோக்கு நாள்


நேற்று பிற்பகல் 02.47 முதல் இன்று மாலை 04.45 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 10.34 வரை பூசம் நட்சத்திரம், பிறகு ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.58 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது. 


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


இன்று என்ன காரியம் செய்யலாம் ?


கிணறு வெட்டுவதற்கு, மந்திர ஜெபம் செய்வதற்கு, நவகிரக சாந்தி வழிபாடு செய்வதற்கு, விவசாய பணிகள் மேற்கொள்ள சிறந்த நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


வளர்பிறை அஷ்டமி என்பதனால் காலபைரவரை விளக்கேற்றி வழிபட நன்மை ஏற்படும். வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகை வழிபாட்டினை மேற்கொண்டால் அதிர்ஷ்டம் பெருகும்.