ஜூன் 27 - இன்றைய நாள் எப்படி ?

Aadmika
Jun 27, 2024,09:53 AM IST

இன்று ஜூன் 27, வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, ஆனி 13

தேய்பிறை சஷ்டி, மேல் நோக்கு நாள்


இன்று இரவு 08.50 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது.  பகல் 02 மணி வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு பகல் 2 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை 


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூசம், ஆயில்யம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


பழைய கணக்குகளை முடிப்பதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, குருமார்களை சந்திக்க, கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட்டால் காரியத் தடைகள் நீங்கும்.