ஜூன் 24 - இன்றைய நாள் எப்படி ?

Aadmika
Jun 24, 2024,09:38 AM IST
இன்று ஜூன் 24, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 10
திருவோண விரதம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்

இன்று காலை 04.46 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது.  மாலை 05.56 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 05.56 வரை மரணயோகமும், அதன் பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை 

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

மிருகசீரிஷம், திருவாதிரை

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

சாந்தி பூஜைகள் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

திருவோண விரதம் என்பதால் பெருமாளை வழிபட திருப்பங்கள் ஏற்படும்.