ஜூன் 21 - நினைத்ததை நிறைவேற்றும் ஆனி மாத பெளர்ணமி
Jun 21, 2024,10:24 AM IST
இன்று ஜூன் 21, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 07
பெளர்ணமி, சம நோக்கு நாள்
இன்று காலை 07.44 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. மாலை 06.58 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு மாலை 06.58 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பரணி, கிருத்திகை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பழைய நகைகளை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்ப்பதற்கு, குளம் மற்றும் கிணறு வெட்டுவதற்கு,இயந்திர பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பெளர்ணமி என்பதால் சிவ பெருமானையும், குல தெய்வத்தையும் வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - தனம்
மிதுனம் - வரவு
கடகம் - செலவு
சிம்மம் - பக்தி
கன்னி - அசதி
துலாம் - சாதனை
விருச்சிகம் - புகழ்
தனுசு - சிந்தனை
மகரம் - குழப்பம்
கும்பம் - திறமை
மீனம் - சோர்வு