ஜூலை 21 - இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம்
இன்று ஜூலை 21, ஞாயிறுக்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 05
ஆடித்தபசு, ஆடி பெளர்ணமி, மேல் நோக்கு நாள்
இன்று மாலை 04.51 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. ஜூலை 20ம் தேதி மாலை 06.10 மணி துவங்கி, ஜூலை 21ம் தேதி மாலை 04.51 வரை பெளர்ணமி திதி உள்ளது. அதிகாலை 02.49 மணி வரை பூராடம் நட்சத்திரமும், அதற்கு பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.00 மணி வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 வரை 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரோகிணி, மிருகசீரிஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
சாந்தி பூஜைகள் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆடி பெளர்ணமி, ஆடித் தபசு என்பதால் அம்மன், சிவன், குலதெய்வத்தை வழிபடுவது குடும்பத்தை செழிப்படைய செய்யும்.