ஜூலை 12 - இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம்

Aadmika
Jul 12, 2024,10:19 AM IST

இன்று ஜூலை 12, வெள்ளிக்கிழமை

குரோதி ஆண்டு, ஆனி 28

ஆனி திருமஞ்சனம், வளர்பிறை சஷ்டி, சுப முகூர்த்த நாள், மேல் நோக்கு நாள்


இன்று பகல் 12.15 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. மாலை 04.20 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.58 வரை மரணயோகமும், பிறகு மாலை 04.20 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அவிட்டம், சதயம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


விதை விதைப்பதற்கு, ஆயுத பயிற்சி செய்வதற்கு, ஆடை அணிகலன்கள் வாங்க, குளம் மற்றும் கிணறு வெட்ட ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஆனி திருமஞ்சனம் என்பதால் நடராஜப் பெருமானையும், வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானையும் வழிபட வெற்றிகளும், அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும்.