ஜூலை 05 - ஏதாவது முக்கிய வேலை பென்டிங்ல இருக்கா.. இன்னிக்கு பண்ணுங்க.. நல்ல நாள்!
இன்று ஜூலை 05, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 21
அமாவாசை, மேல் நோக்கு நாள்
இன்று காலை 04.55 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. இன்று காலை 04.56 துவங்கி, ஜூலை 06ம் தேதி காலை 5 மணி வரை அமாவாசை திதி உள்ளது. காலை 04.35 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், பிறகு தஇருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.57 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.00 முதல் 01.00 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
விசாகம், அனுஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மந்திரம் ஜெபிக்க, கால்நடை பராமரிப்பு பணிகளை துவங்க, கட்டிட சுவர் கட்டும் பணிகளை செய்வதற்கு, தானிய சேகரிப்பு பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆனி மாத அமாவாசை என்பதால் முன்னோர்களையும், சிவ பெருமானையும் வழிபட்டால் தடைகள் விலகி, சுபிட்சம் ஏற்படும்.