ஜோக்ஸ் : பொருள் வைக்க முடியாத பை எது சொல்லு?

Aadmika
May 26, 2023,03:57 PM IST

ராமு : 90ஸ் கிட்ஸ்க்கும் இப்ப இருக்க இளைஞர்களுக்கும் என்னடா வித்தியாசம்?

சோமு : வித்தியாசம் எதுவும் கிடையாது டா. ரெண்டு பேருக்குமே ஒரே மாதிரி பிரச்சனை தான்.

ராமு : அப்படி என்னடா பிரச்சனை?

சோமு : அப்போ எல்லாம் ஒரு பொண்ணை லவ் பண்ண வைக்கிறதே கஷ்டம். இப்போ இருக்க பசங்களுக்கு, அந்த பெண்ணை நம்மள மட்டுமே லவ் பண்ண வைக்கிறதே பெரும் கஷ்டமா இருக்கு.


--


விஜய் : வீடும் ஆபீசும் ஒன்னு

அஜய் : எப்படி டா அப்படி சொல்ற?

விஜய்: ரெண்டு இடத்துலையும் என்ன தான் திட்டு வாங்கினாலும், அசிங்கடப்பட்டாலும் பொழப்பு நடக்கனும்னா போய் தான் ஆகணும். தப்பிக்கவே முடியாது.


--


ராஜா: ஏண்டா அவனை அடிச்சே

காஜா : அடிக்காம கொஞ்சவா செய்வாங்க

ராஜா: அப்படி என்னதாண்டா சொன்னான்

காஜா: பொருள் வைக்க முடியாத பை எதுன்னு கேட்டேன்

ராஜா: அதுக்கு என்ன சொன்னான்

காஜா:தொப்"பை''ன்னு சொல்றான்!!


--


வாத்தியார்: ஸ்டூடண்ட்ஸ்.. உலகத்திலேயே முதல் முறையாக கண்ஆபரேஷன் நடந்த இடம் எதுன்னு தெரியுமா

ராபர்ட்: தெரியும் சார்..

வாத்தியார்: வெரிகுட் .. எங்க சொல்லு

ராபர்ட்: கண்ணுலதான் சார்!