Jokes: உங்க அப்பா யார் கிட்டடா பேசிட்டிருக்காரு மகனே!
- மீனா
வெளியில் போனா வெயிலு வெளுக்குது.. திடீர் திடீர்னு மழையும் காட்டு காட்டுன்னு காட்டுது.. எந்தப் பக்கம் போனாலும் டென்ஷன்.. எதாவது பஞ்சாயத்து.. என்னடா இப்படி இருக்கே எல்லாப் பக்கமும் அப்படின்னு டென்ஷன் ஆகறீங்களா.. டோன்ட் ஒர்ரி பாஸ்.. உங்களுக்காகவே நாலு ஜோக்ஸை சூடா கொண்டு வந்திருக்கோம்.. படிங்க.. சிரிங்க.. ஜாலியா அடுத்த வேலையைப் பாருங்க.. ஓகேவா!
துன்பம் வரும் வேலையில் சிரிங்க
மனைவி: என்ன நான் போகும்போது வரும்போது சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க.
கணவன்: அது ஒன்னும் இல்லம்மா நேத்து ஒரு சித்தரை பார்க்க போயிருந்தேன்ல
மனைவி: ஆமா அதுக்கு என்ன ?
கணவன்: அவர்தான் சொன்னாரு துன்பம் வரும் வேலையில சிரிங்கன்னு
மனைவி: அதுக்கு...?
கணவன்: அதான் நீ வரும்போதும், என்னைக் கடந்து போகும்போதும் சிரிச்சேன்!!
மனைவி: ????
காதுல போடச் சொன்னது ஒரு தப்பாம்மா!
தோழி 1: நேத்து பார்க்கும் போது உன் கணவர் நல்லா தான இருந்தாரு
தோழி 2: ஆமா நல்லா தான் இருந்தாரு.
தோழி 1: பின்ன எப்படி ஒரு நாளைக்குள்ள இவ்ளோ பெரிய கட்டு காலில் போடும் அளவுக்கு அடிபட்டிச்சு?
தோழி 2: நீதான சொன்னே
தோழி 1: நான் என்ன சொன்னேன்?
தோழி 2: இரும்பு கடாய் வாங்கினத உன் கணவரிடம் மறைக்காத காதுல போட்ருன்னு
தோழி 1: ஆமா சொன்னேன். அதுக்கு?
தோழி2: அதான் காதில் போடும்போது தவறி காலில் விழுந்துருச்சு.
தோழி 1: அடிப்பாவி!
என்னத்தே பண்றது
மாமியார்: என் மகன் வேலைக்கு போயிட்டு வந்துட்டானா .
மருமகள்: ஆமாங்க அத்தை இப்பதான் வந்தார், ரொம்ப டயர்டா இருக்குன்னு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார்.
மாமியார்: என் மகன் உங்களுக்காக உழைச்சு உழைச்சு ரொம்ப கஷ்டப்படுறான்.
மருமகள்: நானும் தான் கஷ்டபடுகிறேன். வீட்டில் எல்லா வேலையும் செய்து சமைச்சுட்டு இந்த துணிகளையும் கையில துவச்சுகிட்டு இருக்கேன் அது உங்களுக்கு தெரியலையா.
மாமியார்: இப்படி கையில துவச்சு கஷ்டப்படுறதுக்கு பதிலா உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி வாஷிங் மெஷின் வாங்கி தர சொல்லலாம்ல?
மருமகள்: நானும் கேட்டேன் அத்தை ,ஆனா எங்க அம்மா சொல்லிட்டாங்க உன் கணவர் கூட தான் குடும்பம் நடத்த பணம் வேணும்னு சொல்லி வேலைக்கு போய் ரொம்ப கஷ்டப்படுறார். அதுக்காக உங்க மாமியார் என்ன ஏடிஎம் மிஷினா வாங்கி கொடுத்தாங்கன்னு கேக்குறாங்க அத்தை.
மாமியார்: ????
உனக்கு இதே வேலையாப் போச்சு!
கணவன்: உனக்கு எப்ப பாத்தாலும் இதே வேலையா போச்சு. உப்பு கம்மியா போடுறது இல்லன்னா காரம் கூட போடுறது. எப்படி சமைக்கிறதுனு உங்க அம்மா உனக்கு சொல்லிக் கொடுக்கவே இல்லையா. உன்னைய வச்சுட்டு நான் என்ன பண்றது. இந்த லட்சணத்துல உன் பிரண்ட்ஸை வேற சாப்பிட கூப்பிட்டு இருக்கிற வீட்டுக்கு
மனைவி: வீட்டுக்குள்ள யாருமே இல்ல யாரை பார்த்துடா உங்க அப்பா பேசிகிட்டு இருக்காரு.
மகன்: அம்மா, அவரு கண்ணாடியை பார்த்து பேசிட்டு இருக்காருமா.
மனைவி: ஐயோ பாவம்!