அதெப்படிம்மா.. உன் வீட்டுக்காரர் வேட்டி மட்டும் வெள்ளை வெளேர்னு இருக்கு??
Apr 21, 2023,12:48 PM IST
- மகா
சென்னை: காலையிலேயே வெயில் இந்த வெளு வெளுக்குதே.. பூமியிலேயே மிகப் பெரிய சலவைக்காரர் சூரியன்தானோ.. என்ற கேள்வி வாய் வரை வந்து பிறகு மறுபடியும் உள்ளேயே போயிருச்சு.. காலையிலேயே கடியா.. முடியாதுய்யா ராசா என்று நீங்க சொல்வதும் காது வரை வந்து போகிறது.
வெள்ளிக்கிழமையும் அதுவுமா எதுக்குங்க டென்ஷன்.. எப்பவும் ஜாலியா இருங்க.. எதுக்குமே டென்ஷன் ஆகாதிங்க.. புண்பட்ட மனதாக இருந்தாலும் புன்னகையோடு இருங்க.. மத்தவங்களையும் சிரிக்க வைங்க.. அதை விட வேற என்ன பெரிசாக ஒரு மனித மனதுக்கு சந்தோஷம் கிடைத்து விடும்.
சரி வாங்க கொஞ்சம் கடிச்சுட்டு வரலாம்.. அதாவது கடிஜோக்ஸ் படிச்சுட்டு வரலாம்!
கணேஷ்: நடக்கவே முடியாத ரோடு எது தெரியுமா?
தினேஷ்: ம் ம் ம்......... தெரியலையே!
கணேஷ்: ஈரோடு
தினேஷ்: சரி.. பறக்குற ஊர் எது தெரியுமா..
கணேஷ்: அது என்னடா பறக்குற ஊரு
தினேஷ்: அதுவும் "ஈ"ரோடுதாண்டா!
--
ராம்: வண்டி ஓட்ட தெரியலன்னா என்ன பண்றது?
சோம்: வண்டி ஓட்ட கத்துக்கணும்
ராம் : இல்ல வண்டி ஓட்டையே பெருசா போடணும்
--
ராணி : பூச்சி எல்லாம் நம்ம வீட்டுக்கு வராமல் இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
வாணி : தெரியலையே!
ராணி: நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்.
--
உமா: மழைக்காலத்தில் நாம் ஏன் குடை பிடிக்கிறோம் தெரியுமா?
ரமா: இதுல என்ன ஆச்சரியமாக கேக்குற, மழையில் நனையாம இருக்கத்தானே.
உமா: இல்ல குடையை பிடிக்கலைன்னா அது கீழே விழுந்துரும் இல்ல.
--