Jokes: ஆங்காங்கே மழை பெய்யுது.. வாங்க கடி ஜோக்ஸ் படிச்சுட்டு என்ஜாய் பண்ணலாம்!
சென்னை: ஹாய் நண்பர்களே உங்க ஊர்ல மழை பெய்யுதா.. இங்கெல்லாம் ஜிலுசிலுன்னு பெய்யுதுங்க.. சரி சரி வாங்க.. உங்களுக்கு.. நம்ம எல்லோருக்கும் பிடித்த.. கடி ஜோக்ஸ் படிச்சுட்டே மழையை என்ஜாய் பண்ணலாம்.
விடுகதைகள் என்றாலே அனைவருக்கும் விருப்பமானது. அதிலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவாரசியமான விடுகதைகளை ஆவலுடன் கேட்டு ரசிப்பார். விடுகதை என்பது தற்காலத்தில் மட்டுமா உள்ளது. கற்காலத்தில் இருந்து தானே விடுகதைகள் புழக்கத்தில் உள்ளது.
எப்படி தெரியுமா.. சங்ககாலத்தில் ஒருவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றால் ஒரு புதிர் போட்டு, அவர்களின் அறிவை சோதித்து, அதற்கு விடை அளித்த பின்னர் தான் அரசர் அந்த பரிசுகளை வழங்குவார்கள். அப்படி ஒவ்வொரு செயல்களிலும் விடுகதைகள் முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வந்தது.
இந்த அறிவியல் உலகத்தில் உலகமே மாற்றம் ஆகி உள்ளது. அதில் விடுகதைகளுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன..அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப விடுகதைகளும் மாறிக்கொண்டு தான் வருகிறது. அந்த வரிசையில் தற்போது கடி ஜோக் என்ற பெயரில் விடுகதைகள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விடைகள் மொக்கையாக இருந்தாலும் கூட அந்த சஸ்பென்ஸும், அதில் உள்ள சுவாரஸ்யமும்தான் இங்கு ரசிக்கப்படுகிறது
சரி சரி கொஞ்சம் கடிச்சுக்கலாமா.. வாங்க!
கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
(அதுக்கு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்)
இரண்டு வீரர்கள் கத்தி சண்டை போட்டால் என்ன ஆகும்?
(தொண்டை கட்டி வலிக்கும்)
ஒரு Aunty சர்க்கரை பாக்ஸ்-ல உப்புன்னு எழுதி வெச்சாங்க. ஏன்?
(எறும்பை ஏமாத்தறதுக்குத்தான்!)
Circle மற்றும் square இதுல எது பெயில் ஆகும்?
ஒரு பையன் மாடில இருந்து குக்கரை கீழ போட்டான். ஆனா அந்த குக்கருக்கு எதுவுமே ஆகல ஏன்?
கடைசி ரெண்டுக்கும் நீங்களே விடையைக் கண்டுபிடிச்சுச் சொல்லுங்க பார்ப்போம்.