பத்து நாளாக பெரிய அளவில் மாறாமல் இருக்கும் தங்கம் விலை.. இன்னிக்கு கிராமுக்கு ரூ. 5 குறைந்தது!

Manjula Devi
Oct 10, 2024,02:05 PM IST

சென்னை:   கடந்த பத்து நாட்களாக தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இருப்பினும் பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை ஏற்றமில்லாமல் இருப்பதால் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் மக்கள் பாரம்பரியத்தை பின்பற்றும் விதமாகவும்,வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்பட வேண்டும் எனவும் தங்க நகைகளை வாங்க நினைப்பது வழக்கம்.அந்த வரிசையில் தற்போது ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர்ந்து சுப நாட்கள் வருகிறது. அதற்கேற்ப கடந்த 10 நாட்களாக தங்க விலையிலும் ஏற்றம் இல்லாமல் விலை சற்று குறைந்து வருகிறது. இதனால் மக்கள்  நிம்மதி பெருமூச்சு விட்டபடி நகைகள் வாங்க ஆர்வம் காட்ட ஆரம்பித்து வருகின்றனர்.


சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:




சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூபாய் 7,030 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் இன்று ஐந்து ரூபாய் குறைந்து 7025 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் அதாவது 8 கிராம் தங்கத்தின் விலை  ரூபாய் 40 குறைந்து 56,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:


சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் நேற்று 7669 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஐந்து ரூபாய் குறைந்து 7664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எட்டு கிராம் தங்கத்தின் விலை 40 குறைந்தது ரூபாய் 61,312 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


சென்னையில் இன்று வெள்ளி விலையின் நிலவரம்:


சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 100க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 100 ஆக உள்ளது .


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,000 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,02,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்