ஜெயலலிதா அப்படியா கேட்டார்?.. ஓபிஎஸ் சொன்ன புதுத் தகவல்.. கேட்கவே ஆச்சரியமா இருக்கே!

Meenakshi
Dec 26, 2023,06:31 PM IST

கோவை: நிதிச்சுமை காரணமாக ஜெயலலிதா தன்னிடம்  ரூ.2 கோடி கட்சி பணத்தை கடனாக கேட்டார் என கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அதிமுக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்று அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  நடைபெற்றது. அதே வேளையில், கோவையில் ஆலோசனை கூட்டத்தை  ஓபிஎஸ் நடத்தினார்.




அப்போது அவர் பேசியதில் ஜெயலலிதா பற்றிக் குறிப்பிட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓ.பி.எஸ். பேச்சிலிருந்து...


அதிமுகவின் இத்தனை ஆண்டுகால சரித்திரத்தின் 12 ஆண்டு காலம் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் தான். என்னிடம் ஜெயலலிதா அந்த பொறுப்பை தந்த போது ரூ.2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் கட்சியின் பணம் நான்கு கோடியானது. ஒருநாள் ஜெயலலிதா என்னை அழைத்து எனக்கு தனிப்பட்ட முறையில் பணச்சுமை அதிகமாகிவிட்டது. ஏராளமான வழக்குகளை என்மீது போட்டு இருக்கிறார்கள். வழக்கறிஞர்களுக்கு எல்லாம் பணம் தர வேண்டும் என்று கூறி கட்சி நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் தாருங்கள் என்று கேட்டார். 


உண்மையில் கண்ணீர் விட வேண்டிய நிகழ்வு அது. உடனே நான் ரெண்டு கோடி ரூபாயை வழங்கினேன். அந்த ரெண்டு கோடி ரூபாயை ஒரே மாதத்தில் திருப்பி அளித்தார் ஜெயலலிதா. இதுதான் வரலாறு. 


இன்றைக்கு எங்களை எல்லாம் வம்படியாக வெளியேற்றிவிட்டு அவர்கள் பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார்கள். சாதாரண தொண்டனாக இருந்த ஓபிஎஸ் நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்எல்ஏ வாக இருக்க முடியுமா? அமைச்சர் ஆகியும் இருக்க முடியுமா?  முதலமைச்சராக இருக்க முடியுமா?  என்றார் ஓ.பன்னீர்செல்வம்.